சென்னை மக்களே.! ரூ1,000 திட்டத்திற்கு ஜூலை 3ம் வாரம் முதல் சிறப்பு முகாம்.!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!!
Chennai Corp decided special camp from july 3rd week
தமிழ்நாடு அரசின் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தான கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி முழுவதும் ஜூலை 3ம் வாரம் முதல் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் உரிமைத்தொகை பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நியாய விலை கடைகள் அமைந்துள்ள இடம் மற்றும் குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் சமுதாயக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என தேவையான இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், மின் விசிறி, இருக்கைகள், சாய்வு நடைபாதை, முதலுதவி பெட்டி, தேவையான இடங்களில் பந்தல்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களை தொடர்புகொண்டு முகாம்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பணியாற்றுவதற்காக ஒரு பொறுப்பு அலுவலர், வரி மதிப்பீட்டாளர் ஆய்வாளர், குடிமை ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர் துப்புரவு மேற்பார்வையாளர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்களுக்கு பயனாளர்களை தேர்வு செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி பயனாளர்களின் விவரங்கள் சேகரிக்க தேவையான கருவிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டல அதிகாரிகளுக்கு வாங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சென்னை உட்பட்ட பகுதிகளில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai Corp decided special camp from july 3rd week