சென்னையில் 15 மண்டலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்கள், ககன்தீப் சிங் பேடி அதிரடி அறிவிப்பு.!
Chennai Counting Places
சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மண்டலத்திற்கு ஒரு மையம் என 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு நாளன்று பதிவாகும் வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும், ஒரு மண்டலத்திற்கு ஒரு வாக்கு எண்ணும் மையம் என்று 15 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில், 1 முதல் 14 வரையிலான வார்டு வாக்குகள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளையன் செட்டியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும்,
15 வது வார்டுப்முதல் 22 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகளை மணலி, பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரத்தில் உள்ள 23 -வது வார்டு முதல் 33 -வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள் சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியிலும்,
தண்டையார்பேட்டையில், 34 -வது வார்டு முதல் 48 -வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், ஆர்.கே.நகர், காமராஜர் சாலியில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராயபுரம் மண்டலத்தில் 49 -வது வார்டு முதல் 63 -வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், பாரதி மகளிர் கல்லூரியிலும்,
திரு.வி.க.நகர் மண்டலத்தில் 64 -வது வார்டு முதல் 78 -வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், புரசைவாக்கம், வரதம்மாள் கார்டன், அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மண்டலத்தில், 79 வது வார்டு முதல் 93 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள் கிழக்கு முகப்பேரில் உள்ள தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியிலும்,
அண்ணாநகர் மண்டலத்தில், 94 -வது வார்டு முதல் 108 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள் பச்சையப்பன் கல்லூரியிலும்
தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 109 -வது வார்டு முதல் 126 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், லயோலா கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியிலும்
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 143 வது வார்டு முதல் 155 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள் மதுரவாயல் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட 156 -வது வார்டு முதல் 167 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள் ஆலந்தூர் எம்.கே.என். சாலை, பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியிலும்,
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட 168 -வது வர்டு முதல் 180 வது வார்டு வரை பதிவாகும் வாக்குகள், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட 181 -வது வார்டு முதல் 191 வது வர்டு வரை பதிவாகும் வாக்குகள் பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலம் பொறியியல் கல்லூரியிலும்,
சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட 192 -வது வார்டு முதல் 200 வது வர்டு வரை பதிவாகும் வாக்குகள் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.