சென்னை, மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.! நடைமேடையில் ஏறி கடைக்குள் புகுந்த ரயில்.! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் (பீச் ஸ்டேஷன்) மின்சார ரயில் தடம்புரண்டு நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இன்று மாலை 4 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. 

முதல்கட்ட தகவலின்படி, பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த ரெயில், தடம்புரண்டு நடைமேடையில் ஏறி கடைகள் மீது மோதியுள்ளது. 

தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.
 
பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. எனவே, உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 


 
மின்சார ரயிலில் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியான நிலையில், அந்த மின்சார ரயில் ஓட்டுநர் பவித்ரன் என்பவர் மட்டும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai ElectricTrain Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->