மக்களே உஷார்! சென்னையில் 3 நாளாய் சிறுநீர் கழிக்காமல் உயிரிழந்த இளைஞர்! ஜிம்மில் கொடுத்த ஊக்க மருந்து!
Chennai GIm fitness youngster mystery death
சென்னை: காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த மீன் வியாபாரி ராம்கி (வயது 35), மனைவியை பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனியாக வாழ்ந்து வந்தார்.
மேலும், கடந்த ஆறு மாதங்களாக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். உடலை சீர் செய்யும் நோக்கில், ஜிம் பயிற்சியாளர் பரிந்துரையின்படி ஊக்கமருந்துகளை எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராம்கிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. மூன்று நாட்களாக சிறுநீர் வெளிவராத சூழ்நிலையும் உருவானது. உடல்நிலை மோசமாகியதால் உறவினர்கள் அவரை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ராம்கி உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவரது சிறுநீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
“ஜிம் பயிற்சியாளர் கூறிய மருந்துகளை பயன்படுத்தியதே ராம்கியின் மரணத்துக்குக் காரணம்” எனக் கூறி, காசிமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
English Summary
Chennai GIm fitness youngster mystery death