#சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! கள்ளக்குறிச்சி தேவராஜ் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை;

சோதனையின் முடிவில் புரளி என்பது தெரியவந்ததை அடுத்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என்பவர் மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தி விவரம் : சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, "சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும்" என்று தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்கள், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆளுநர் மாளிகைக்கு சென்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாலையின் அனைத்து பகுதிகளிலும் தேடியபோதும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வரவே, இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த மர்ம நபர் அழைத்த செல்போன் என்னை கொண்டு தேடியதில், போனில் மிரட்டல் விடுத்த அந்த நபர் கள்ளக்குறிச்சியை அடுத்த எல்லாரை சூரக்கோட்டை சேர்ந்த தேவராஜ் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே,  தேவராஜ போலீசார் கைது செய்து விசாரண விசாரணை நடத்தினர் அப்போது.

அப்போது அவர் லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Guindy Governor RN Ravi Bomb Threat TN Police 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->