சென்னை : கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பரபரப்பு! திடீரென பற்றி எரிந்த கார்! - Seithipunal
Seithipunal


சென்னையின் மிக முக்கிய சாலை சந்திப்பான கத்திப்பாரா மேம்பாலத்தில், நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறிப்பிட்ட அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6 45 மணியளவில், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எறிந்தது.

காரில் பயணித்த குடும்பத்தினர் மற்றும் ஓட்டுநர், காரில் புகை வருவதை அறிந்த உடன், காரை விட்டு வெளியேறியதால், அனைவரும் உயிர் தப்பினர். 

கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.

பரபரப்பான கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் பற்றி எரிந்த இருந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Guindy Kathipara bridge car fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->