#BigBreaking || அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பான ஆப்பு வைத்த உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம்.! - Seithipunal
Seithipunal


டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்திற்கு புற்று நோய்போல் பரவி, பணம் சம்பாதிக்கும் ஒரு பேராசையை அதிகரித்து உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர் ராதா என்பவர் இடம் மாறுதல் கோரிக்கைகளை ரத்தனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணை செய்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அவர்கள், 

"டியூஷன் எடுப்பது தொடர்ந்தால் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டு, பணி பக்தியை எதிர்பார்க்க முடியாது. தற்போதைய கல்வித்துறையின் நிலை நிச்சயம் சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை" என்று நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், "கல்வித் துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் அனைத்தும் உற்று நோக்கப்பட வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

டியூஷன் சென்டர் நடத்தும் அல்லது வீடுகளில் டியூஷன் சென்டர் எடுக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி வாட்ஸ்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும். 

பிற அரசு அலுவலர்கள் உடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் வேலை நாள் நேரம் குறைவானதுதான். தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளின் கல்வித்தரம் சொல்லும் அளவுக்கு இல்லை" என்று நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai HC Deivision Say About Govt School Teacher Tuition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->