மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று, ராமநாதபுரத்தை சேர்ந்த பூபேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஒரு நடுநிலைப் பள்ளியை நேரடியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடியாது என்று பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆனாலும் சந்தேகம் இல்லை.
 
குறைந்தபட்சம் தாலுகா அல்லது மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப் பள்ளியை கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால், மருத்துவ படிப்பில் தமிழக அரசு வழங்கக்கூடிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டம்.

இது குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Division Medical Reservation Govt School Student


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->