செம்மரம் கடத்திய சென்னை தலைமைக் காவலர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகர். தற்போது சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சந்திரசேகர் கடந்த 17ம் தேதி பணி முடிந்து ஓய்வுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இவர் கடந்த 18ம் தேதி ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும், இவருடன் கடத்தலில் ஈடுபட்ட 15 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டை, ஒரு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட காவலர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், சந்திரசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே இவருக்கும் செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது தெரியவரும் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தல் வழக்கில் சென்னை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai head constable suspend for sheep smuggling in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->