ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்தைக் குறைப்பதற்காக கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் செல்ல வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கு கழகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்றம், ஏற்கனவே மக்கள் கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.

கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகளில் பதிவு செய்த பயணிகளை போரூர், சூரப்பட்டு தவிர, வேறு எந்த இடங்களையும் குறிப்பிடக்கூடாது" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order amni bus run from koyambed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->