எதிர்கட்சிக்கும் அனுமதி வழங்க வேண்டும் - தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
chennai high court order permision to tn police for opposition politcal party protest
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த காவல் துறை ஆணையர் அனுமதி மறுத்துவிட்டார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
அப்போது தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் பாமக சார்பில் ஆளும்கட்சிக்கு மட்டும் விதிகளை மீறி காவல்துறை ஆணையர் அனுமதியளித்துள்ளார் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், "ஜனவரி 6 முதல் 21 வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது என தடை விதித்திருந்த காவல்துறை, அனுமதியின்றி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவுக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் காவல்துறையினர் அமல்படுத்த வேண்டும்" என்றுத் தெரிவித்தது.
English Summary
chennai high court order permision to tn police for opposition politcal party protest