சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai including 15 districts rain 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->