கலைஞர் இங்கே.. எய்ம்ஸ் எங்கே? - ட்ரெண்டிங் முழக்கத்தை பரப்பும் திமுக.!!
chennai kalaingar hospital inuagration dmk supporters spread new sentence
கலைஞர் இங்கே.. எய்ம்ஸ் எங்கே? - ட்ரெண்டிங் முழக்கத்தை பரப்பும் திமுக.!!
சென்னையில் உள்ள கிண்டியில் இன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் திறப்புவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை ரூ230 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 லட்சம் சதுர அடி பரப்பில், 7 தளங்கள், 1000 படுக்கை வசதிகள், ரூ146 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மற்றும் 15 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன், கட்டப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே உருவாகி திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதனை, திமுகவினர் ‘மருத்துவ தலைநகரில் மற்றுமொரு மகுடம்’ என்று கொண்டாடுகிறது. அதுமட்டுமல்லாமல், மதுரையில் அறிவிப்பு வெளியானதோடு கட்டுமானப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல், பல ஆண்டாக காத்திருப்பில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை முன்னிறுத்தி, பாஜகவை சரமாரியாக பேசி வருகிறது.
மேலும், ’கலைஞர் இங்கே.. எய்ம்ஸ் எங்கே?’ என்று முழக்கத்தை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை காரணமாக கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் பாஜகவை பங்கம் செய்துவந்த திமுகவினருக்கு, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் திறப்பு விழா நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
English Summary
chennai kalaingar hospital inuagration dmk supporters spread new sentence