சென்னையில் பயங்கரம்! பெற்ற குழந்தையை குத்தி கொலை செய்த கொடூர தாய்! செல்போனை கைப்பற்றிய போலீசார்!
Chennai Kelpak Mother kill own son
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராம்குமார் மற்றும் திவ்யா தம்பதிக்கு ஐந்து வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகன் உள்ளனர். குடும்ப பிரச்சினைகள் காரணமாக, திவ்யா தனது கணவனுடன் பிரிந்து, குழந்தைகளுடன் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இன்று மாலை 3 மணியளவில், திவ்யா தனது இரண்டு குழந்தைகளையும் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தார்.
இதில், ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஐந்து வயது குழந்தை கத்தி காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திவ்யாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai Kelpak Mother kill own son