தமிழக இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! மழை எதிரொலி - முதலுக்கே மோசமாகிடுச்சே..!  - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கோடை மழையால் தக்காளி உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படும் தக்காளியின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து 55 முதல் 60 லாரிகளில் தக்காளி கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மழை காரணமாக கடந்த சில நாட்களாக 45 லாரிகளாக குறைந்துள்ளது. 

இதனால் தக்காளியின் விலை வழக்கத்தை விட விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 45-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வின்படி, தக்காளி ஒரு கிலோ ஒன்றிற்கு மொத்த விற்பனை கடைகளில் ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மற்ற காய்கறி கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூபாய் 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்வால் அதிர்ச்சடைந்த இல்லத்தரசிகள், சமையலில் தக்காளியை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் போன்றே கடந்த சில நாட்களாக கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸின் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

தற்போது பீன்ஸின் விலை சற்று குறைந்து கிலோ ஒன்றிற்கு ரூபாய் 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அவரைக்காய் கிலோ ஒன்றிற்கு ரூபாய் 80-க்கும், முருங்கைக்காய் கிலோ ஒன்றிற்கு ரூபாய் 150-க்கு‌ விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Koyambedu Tomato Price high june 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->