மெரினா: சந்திரமோகன், தனலட்சுமிக்கு ஜாமின்! நீதிபதி எழுப்பிய கேள்வி!
Chennai Marina Drunken Man and woman bail case MadrasHC
#கடந்த மாதம் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், நள்ளிரவில் காரை நிறுத்திய சந்திர மோகன், தனலட்சுமி ஆகியோரிடம், காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர் ரோந்து போலீசார்.
அப்போது மதுபோதையில் இருந்த அந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி ‘உதயநிதியை கூப்பிடுவா’ எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததால், இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துபணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சந்திரமோகன், அவரது பெண் தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே சந்திர மோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி இருவரும் வழக்கு தொடர்ந்த நிலையில், சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டனர் என காவல்துறை தரப்பு தெரிவிக்க, இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்? என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார்.
English Summary
Chennai Marina Drunken Man and woman bail case MadrasHC