நோட் பண்ணிக்கங்க.. துரோகிகளை வைத்து வெகுகாலம் ஓட்ட முடியாது.. போராட்டம் வெடிக்கும் - கொந்தளிக்கும் அரசியல் புள்ளி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு தமிழக அரசு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இருந்தது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தை பொருத்தவரை அருந்ததியர்கள் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களின் மக்கள் தொகை குறைவாக உள்ளதாகவும், அவர்களுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு என்பது அதிகம் என்றும், இது சமூக அநீதி என்றும், பட்டிலினத்தை சேர்ந்த தமிழ் சமூகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இந்த அருந்ததியர் உள் ஒதுக்கீடுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், நேற்று இந்த உள் ஒதுக்கீடை ரத்து செய்யக்கோரி தலைநகர் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்சியினர் பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர். 

இன்று காலை அருந்ததியர் உள் ஒதுக்கீடை ரத்து செய்யக்கோரி, தமிழக ஆளுநரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சற்றுமுன் நேரில் சந்தித்து உள்ளார்.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அருந்ததியருக்கு முன்னுரிமையுடன் கூடிய உள் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் வரும்… 

இனி தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பறையர்களின் போராட்டம் தமிழகமெங்கும் தலைதூக்கும்! துரோகிகளை வைத்து வெகுகாலம் ஓட்டமுடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இதில், துரோகிகள் என்று ஷியாம் குறிப்பிடுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஷியாம் சொன்ன கருத்துக்களை வைத்து பார்த்தால், துரோகி என்று விசிக திருமாவளவனை தான் குறிப்பிடுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT Shyam condemn to dmk vck


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->