புத்தாண்டு கொண்டாட்டம் | மெரினாவில் குவிந்த மக்கள்!
chennai marina New Year 2023
சென்னை, மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி குடும்பம் குடும்பமாக மக்கள் படையெடுத்து வந்தனர்.
ஒரே நாளில் குவிந்து வரும் மக்களால் காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று பழவேற்காடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர். அதே சமயத்தில், பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றலா பயணிகள் படகு சவாரி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் போன்ற கவசங்கள் ஏதுமின்றி படகு சவாரி செய்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோல் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பிச்சாவரம் அலையாத்தி காடுகள் நடுவே படகு சவாரி செய்து மக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், மேலும் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பிச்சாவாரத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் படகு சவாரி செய்வதற்கு டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
English Summary
chennai marina New Year 2023