மெரினாகடற்கரையில் காணாமல் போனா 18 பேர் - துரிதமாக செயல்பட்ட சென்னை போலீஸ்!
Chennai Marina new year 2023 missing case
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மக்கள் கூட்ட நெரிசலில் காணாமல் போன 18 பேர் சென்னை பெருநகர காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டனர் என்று, சென்னை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் : ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சோதனை சாவடி அருகே அடுத்தடுத்து லாரி, கார், ஆட்டோ உள்பட ஐந்து வாகனங்கள் மோதி கொடூரமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் ராக்கிபட்டி பிரிவு சாலையில் இன்று காலை, சாலையை கடக்க முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்காளானது.
இந்த விபத்து குறித்து சேலம் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் : ஆத்தூர் அருகே கோவில் மற்றும் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், முற்றிலுமாக வீடுகள் மற்றும் கோவில் இருந்து சேதம் ஆகி உள்ளன.
ஈரோடு : பொன்னிகொட்டாய் பகுதியில் அடுத்தடுத்து தீப்பிடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
English Summary
Chennai Marina new year 2023 missing case