சென்னை வாகன ஓட்டிகளே உஷார்! லைசென்ஸ் சஸ்பென்ஸன் ஆகும்!
chennai Motorcycle license suspension
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் லைசென்சை முடக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக, சிக்னலை மீறிச் செல்பவர்கள், ஸ்டாப் லைன் தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோரின் லைசென்சை முடக்கும் நடவடிக்கையை தற்போது போலீசார் கையில் எடுத்து உள்ளனர்.
கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரையில் 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது. இப்படி முடக்கி வைக்கப்படும் லைசென்ஸ்கள் 3 முதல் 6 மாதங்கள் வரையில் செயல்படாதவை என்கிற அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதனால் இந்த கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மீறி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18 மாதங்களில் மட்டும் 4846 லைசென்ஸ்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. சிக்னலை மீறி சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு 3500 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் 1362 பேரின் லைசென்சை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். வேகமாக வாகனங்களை ஓட்டிய 2384 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது.
செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 1130 பேரின் லைசென்சும், போதையில் வாகனம் ஓட்டிய 1400 பேரின் லைசென்சும் முடக்கப்பட்டிருக்கிறது.
English Summary
chennai Motorcycle license suspension