சென்னை அருகே வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது!
Chennai near 33 bangaladeshis arrested
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 33 வங்கதேச குடிமக்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், ரகசிய தகவலின் பேரில் இன்று (ஏப்ரல் 28) காலை நடைபெற்ற தீவிர சோதனையில் இது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மாங்காடு பகுதியில் 26 பேர் மற்றும் குன்றத்தூர் பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மாங்காடு அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில், இவர்கள் சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது தெரிய வந்துள்ளது. தற்போது, அவர்கள் தமிழகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டனர்? தங்கும் இடங்களை யார் ஏற்பாடு செய்தனர்? என்பதைக் கண்டறிய டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் முதியவர்களும் இருப்பதால், அவர்களின் பின்னணி, தமிழகத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் பல்வேறு வழிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Chennai near 33 bangaladeshis arrested