பொது இடங்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகையே  சீர்குலைக்கின்றன. 

அதனால், தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, அதற்குத் தொடர்புடைய நபர்களின் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 11.1.2023 முதல் 1.2.2023 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதினைந்து மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டும், 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai peoples warning to peoples for poster on public places


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->