சென்னை || வீட்டில் வைத்து விபச்சாரம் : சிக்கிய தரகர் கும்பலால் சிக்கிய உமா.! மீட்கப்பட்ட இளம்பெண்கள்.!
chennai police arrest uma
சென்னை மாநகரத்திற்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களை, தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஒரு கும்பல் பணம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதன் பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், விபசார தரகர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரவாயில் பகுதி சொக்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்ததில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த உமா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் பெண்களை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட உமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
chennai police arrest uma