பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி, பொதுமக்களுக்கு சென்னை காவல் கமிஷனர் வெளியிட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத்தில் இருந்து சென்னை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ் பி ஜி குழுவை சார்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அடையாறு ஐ என் எஸ் தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையிலிருந்து பிரதமர் புறப்படும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேற்று சென்னை மாநகர காவல் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் எல்லா இடங்களும் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமான பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலும், சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police commissioner warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->