ரெயிலில் அடிபட்டு சென்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
Chennai police sub inspector killed by train
சென்னை அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த செந்தில்குமார் (54), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். வேலூரில் இருந்த தனது பயணத்தை முடித்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு திரும்பினார்.
இன்று அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி நிலையத்தில் நின்றபோது, 2-வது நடைமேடையில் சென்று தண்டவாளப் பகுதியில் இருந்து ரெயிலில் ஏற முயற்சித்தார். அப்போது ரெயில் திடீரென புறப்பட்டதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவருடைய கால்கள் துண்டாகி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த நிகழ்வை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காட்பாடி ரெயில்வே போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலிஸ் அடையாள அட்டை மூலம் அவர் செந்தில்குமார் என உறுதி செய்யப்பட்டதுடன், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பரிதாப சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Chennai police sub inspector killed by train