சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையம் இடம் மாற்றம்.. வெளியான தகவல்.!
Chennai private bus terminus change
சென்னை கோயம்பேடு தனியா பேருந்து முனையத்தை இடம்மாற்ற சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையமாகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பேருந்து நிலையம் ஆகும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் 2000 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் தாங்கும் திறன் உடையது.
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Chennai private bus terminus change