செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வெளியேற்றம் அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

ஏரி முழுக் கொள்ளளவை நெருங்கி இருப்பதால் நீர்வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளிலுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

இதேபோல், கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரிநீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Puzhal Chembarambakkam Lake TNRains 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->