செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டி.ஜி.பி - எழுத்தாளருக்கு 5,000 வெகுமதி.!
chennai semmanchery police station dgp cylendirababu visit
இன்று சென்னையில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள் மற்றும் குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரணை செய்தார்.
அதன் பின்னர், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் பதிவேடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டிருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5,000 வெகுமதி வழங்கினார்.
இதையடுத்து, அங்குள்ள அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
English Summary
chennai semmanchery police station dgp cylendirababu visit