நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை... சென்னை வாசிகளே கவனம்! - Seithipunal
Seithipunal


நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கு உள்ளது.

பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்பட உள்ளது. விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. 

பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள்,

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. 

மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Subur ban MTC Bus Announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->