தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை ஆதரிப்பதாக ஃபெப்சி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திரைப்பட துறையில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை ஆதரிப்பதாக ஃபெப்சி அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி - FEFSI) தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்த விவரம் பின்வருமாறு; 

அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்புகளை தொடங்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஃபெப்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டால் வேலை இன்றி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஃபெப்சி தெரிவித்துள்ளது.

திரைத்துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ஏழு சங்கத்தை சேர்ந்த குழு அமைக்க உள்ளதாகவும் ஃபெப்சி தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் குழுவில் புகார் அளிக்கலாம் என்றும், அளிக்கப்படக்கூடிய புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் ஃபெப்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tamil Cinema FEFSI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->