பருவத் தேர்வுக்கான புதிய அட்டவணை - சென்னை பல்கலை. அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையினால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு,கலை அறிவியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளின் விவரங்களை சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதில், டிசம்பர் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த பல்கலைக்கழக பருவத் தேர்வுகள், டிசம்பர் 11 முதல் 16-ம்தேதி வரை நடைபெறும். 

இந்தத் தேர்வு குறித்த விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்பட கூடுதல் விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai university annaounce new semaster exam time table


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->