உதவி பேராசிரியர்களின் நியமனம் செல்லாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 152 பேர் உரிய தகுதி பெற்றவர்கள் இல்லை எனக் கூறி அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதேபோன்று அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரேமலதா உட்பட ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுந்தரமணியம் 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆராய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் கல்லூரி கல்வி இயக்குனர் 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பேராசிரியர் பணி அனுபவத்திற்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை அடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் தேர்வு நடைமுறை முறையாக பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் நியமனமும் செல்லாது என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC cancels appointment of professors of Pachaiyappan trust


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->