விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்க வருமானது வரித்துறைக்கு நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ரூ.206.42 கோடி வரி எய்ப்பு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மூன்று வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு நிதி பெறுகின்ற கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளதால் தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை. எனவே வங்கி கணக்குகள் மீதான தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் வருமானவரித்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு மீது இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC orders notice to Income Tax Dept in vijayabaskar case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->