ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான மணிரத்னம் அவர்களுக்கும் முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அனில் கபூர் மற்றும் லட்சுமி நடிப்பில் வெளிவந்த "பல்லவி அனுபல்லவி" என்ற கன்னட திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002-இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் இவர் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister MK Stalin birthday wishes to Governor Tamilisai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->