முதல்வர் முக ஸ்டாலின் அம்மா உணவகத்தில் தீடீர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீரென சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில்ஆய்வு  மேற்கொண்டார். அவருடன் தலைமை செயலக அதிகாரிகலும் பார்வையிட்டனர்.

ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக பசி ஆறுவதற்காக அம்மா உணவகங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2013ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. அம்மா உணவகங்களின் உணவின் தரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர்களிடம்  உணவின் தரம் குறித்தும் அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களின் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். உணவகத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். பின்னர் அம்மா உணவகத்தின் சமையல் அறையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Mk Stalin mother restaurant was investigated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->