நேர்மையான தேர்வு முறையை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நீட் குளறுபடியால், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு வெளியான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து உள்ளனர். அரியானா  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் எடுத்திருப்பது நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலை, இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வில் விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு ஏந்துள்ளது. அதனை அடுத்து இன்று நடைபெற இருந்த முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில், நெட் தேர்வை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மாணவர்கள் அவர்களின் குடும்பங்களில் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin condemns postponing NEET examination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->