''தமிழர்களை இணைக்கும் அடையாளம் தமிழ்'': முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


உலக தாய்மொழி நாளான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், உலகெங்கும் அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து வாழும் தமிழர்களை இணைக்கும் ஆற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் 'தமிழ்'. 

"தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?" 
 என்ற பாவேந்தர் பாடிய தாய் தமிழ் காக்கும் மரபில் வாழ்ந்தவர்கள் நாம். 

மேடை சொற்பொழிவு, பெயர் சூட்டல், திரைப்பட உரையாடல், அரசு ஆவணங்கள் என அனைத்திலும் தமிழினை பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து மீட்டு அதன் பழம்பெருமையை நிலை நாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். 

அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில் உலக தாய்மொழி நாளான இன்று, தமிழக சட்டப்பேரவையில் அன்னை தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட உறுப்பினர்கள் அனைவரும் உறுதி ஏற்றோம் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->