12 அமைச்சர்களை தனியாக எச்சரித்த முதல்வர்.! நடந்தது என்ன?.  - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், நெல் கொள்முதல் மற்றும் அரசின் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

மேலும் நாளை (17 ம் தேதி) தமிழக சட்டப்பேரவையில் குளிர் கால கூட்டத் தொடர் துவங்க இருக்கும் நிலையில் புதிய சட்ட மசோதாக்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது, இதுவரை தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட புதிய முதலீடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்து துறைகளும்  எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகி இருக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

இதையடுத்து துறைவாரியாக ஒவ்வொரு அமைச்சரிடமும் முதல்வர் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக 12 அமைச்சர்களை முதல்வர் தனியாக சந்தித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மீது வரும் விமர்சனம் குறித்து பேசிய முதல்வர், வருங்காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister stalin warned to ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->