முதலமைச்சரின் இன்றைய முதலீட்டு ஒப்பந்தம் தேவையற்றது?...தமிழிசை பேட்டி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ளவை தான் என்று, தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக  பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது பேசிய அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை என்றும், அமெரிக்காவில் இருந்து மேலும் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லதுதான் என்று கூறியுள்ளார்.

மேலும், புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் வேண்டுகோள் விடுத்த அவர், எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது என்றும், இங்கே விடியுமா என்று தெரியவில்லை என்று விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Ministers investment agreement today unnecessary Tamilisai interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->