காலையிலே சோகம்! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குழந்தை! பாட்டி கண் முன்னே நடந்த கொடூரம்!
child died in an electric shock near Salem
சேலம் அருகே மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வைத்தியஉடையார் காட்டுப்பகுதியை சேர்ந்தவர் நேதாஜிகுமார். இவருடைய மனைவி நந்தினி. இருவருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 10 மாத பெண் குழந்தை இனன்யா.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது இவர்களை வீட்டில் அருகே உள்ள நந்தினியின் தாய் கலைச்செல்வியிடம் குழந்தையை விட்டு செல்வது வழக்கம். கலைச்செல்வி மின்மோட்டார் உடன் கூடிய தையில் இயந்திரம் வைத்து வீட்டிலேயே துணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் முன் வழக்கம் போல் குழந்தையை பாட்டி வீட்டில் விட்டு சென்றுள்ளனர். உலகம் அறியாத அந்த குழந்தை சிரித்தபடி அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாட கூறப்படுகிறது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தபோது கலைச்செல்வி துணி தையித்து கொண்டிருந்தார்.
குழந்தை திடீரென இயந்திரத்துக்கு செல்லும் மின் ஒயரில் கை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பாட்டி கலைசெல்வி கண் முன்னே மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
child died in an electric shock near Salem