பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை: டாக்டர் இராமதாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
PMK Shadow Budget 2025
வருகின்ற 10-ஆம் தேதி தைலாபுரத்தில் பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 2003 - 04ஆம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தயாரித்து வெளியிட்டு வருகிறது.
நடப்பாண்டில் பா.ம.க. அதன் 23ஆம் நிழல் நிதிநிலை அறிக்கையை மக்கள் மாமன்றத்தில் வெளியிடவுள்ளது.
நாளை மறுநாள் மார்ச் 10-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடவுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் தலைமை நிலையச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.