கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்; மோகன் யாதவ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் லவ் ஜிகாத் குறித்து அவர் பேசியுள்ளார்.அதாவது நமது அப்பாவி மகள்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை நமது அரசு சும்மா விடாது. மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி கட்டாய மத மாற்றம் செயலில் ஈடுபடும் நபர்களை வாழவே விடக் கூடாது. மத சுதந்திர சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் அறிவித்துள்ளார். 

அத்துடன், கடந்த 2021-ஆம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 08-ஆம் தேதி, கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக, மத சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியது. மேலும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who commit forced conversions will be given the death penalty Mohan Yadav announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->