சமூக நீதின்னு வாய் கிழியுமே.. "translate பண்ணா" நாறிடும்.. ரவுண்டு கட்டும் சின்மயி.!! - Seithipunal
Seithipunal


சேலம் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஏ.வி ராஜு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், நடிகைகளுக்காக 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அந்த பணத்தை எடப்பாடி பழனிச்சாமி தான் செலவழித்தார் எனவும் கூறியுள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகை குறித்து ஏவி ராஜு கூறிய கருத்துக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்மீ டூ மூவ்மெண்ட் இந்தியால 2018 ல நடந்தப்ப, “போகுற போக்குல என்னத்த வேணா சொல்லுவியா?” - அப்படீன்னு கேட்ட கேவலமான பிறவிங்கதான் இங்க. கலாசாரம் பெண்ணியம் சமூக நீதின்னு பேச்சு மட்டும் வாய் கிழியுமே தவிற தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க பெண்கள பத்தி எப்படி பேசுறாங்கன்னு translate பண்ணி உலகதுக்கு காட்டணும். நாறிடும். 

ஊருக்கே தெரிஞ்ச பாலியல் குற்றவாளிய அடையாளம் காட்டுனா, இங்க இருக்க ஆளுங்களோட முதல் ஆதங்கமே -“அய்யோ நமக்கு அந்தஸ்து, பணம், அரசியல் பலம், பதவி எல்லாம் இருந்திருந்தா நாமும் சில பல பெண்கள ரேப் பண்ணிருக்கலாமேன்னு ரேப் fantasies வெச்சுட்டு சுத்திட்டு இருக்கவங்க பெரிய்ய ஒழுங்கு மட்டை மண்ணாங்கட்டின்னு மேடைகள்ள speech குடுப்பாங்க. 

அதே ஆட்கள் பாலியல் குற்றவாளிகள கொண்டாடி, மகுடம் சூட்டுனாங்க - குற்றம் சாட்டுன பெண்கள “ஏன் டீ உயிரோட இருக்க? சாவலியா?”ன்னு கேட்டாங்க. “ஏன் டீ இப்ப சொன்ன, அப்பவே சொல்லல”ன்னு இந்த ஊர் பெரியவங்க ஊர் பெரியவங்கன்னு இன்னும் சில ரேப் அபாலஜிஸ்ட் பிறவிங்க கேட்டாங்க (பெண்கள் ஆண்கள் எல்லாருந்தான்) , ரேப் கல்சரில் ஊருனவனுங்கத்தான் இந்த ஊர்ல. பாலியல் குற்றவாளிகளுக்கு துணை போனவனுங்கத்தான் இங்க - அது தான் இந்த நாட்டின் கலாசாரம். கருணாஸ் அந்த டைம்ல குடுத்த பேட்டியில - ஆமா அத்தன பேரும் அப்படித்தான் அதுக்கென்ன இப்பன்னு பேட்டி குடுத்தவருதான். இப்படியாப்பட்ட மகான்கள் இருக்கும்போது சமுதாயத்துல பெண்களுக்கு பாலியல் குற்றங்கள்தான் சகஜமா நடக்கும். பாலியல் குற்றவாளிகள ஊக்குவிக்கும் கலசாரம் “இன்னும் ரேப் பண்ணு அப்யூஸ் பண்ணு, நான் துணை நிக்குறேன்”னு வரும் கலாசாரம். 

இப்ப போகுற போக்குல என்னத்த வேணா சொல்லலாம்னு சொல்லிட்டு போறாரு ஒரு அரசியல்வாதி - கேட்பார் யாருமில்ல. 

பல issues ல criticise பண்ண தயங்காத அரசியல்வாதிங்க - பாலியல் குற்றம்னா மட்டும், especially குற்றம் சாட்டப்பட்டவன் அவனுங்களோட ஆளாக இருந்தா போதும் - பொத்திக்கிட்டு கிடப்பாங்க. Birds of a feather flock together. They know each other and their dirty secrets only too well - and one rat will sink the entire ship. 

So எப்பல்லாம் முடியுதோ கூடி கும்மாளம் அடிச்சுட்டு இருப்பானுங்க.அவனவனுங்க கும்பல்ல இருக்க பாலியல் குற்றவாளிக்கு துணைபோகும் மக்கள் அவங்களுக்கு வேணும்னா எந்த பெண்ண வேணா எந்த பாலியல் குற்றவாளிக்கு வேணா தூக்கி போடுறவங்கத்தான் இங்க பேர் - like a piece of meat. Thats all these conniving rape fantasists think of women. 

ஆக மொத்தம் இவனுங்க மொகறைங்களுக்கு அவனுங்க கேக்குற பொண்ணு வேணும். அத எவனாச்சும் pimp பண்ணி கூட்டுட்டு வரணும்னு வெக்கமே இல்லாம பேசுவானுங்க. இப்படியாப்பட்ட பெண்கள அப்யூஸ் பண்ணுற, harass, sexually assault பண்ணிட்டு இருக்கும் பிறவிங்க வேறோட கூண்டோட கதறிக்கதறி நோய்வாய்பட்டு - ஏன் இன்னும் உயிரோட இருக்கொம், இன்னும் ஏன் சாகலை, சாவு வராதான்னு - அவதிப்பட்டு சாகனும்னு மனப்பூர்வமா வேண்டிக்குறேன். 

Hoping for a safer, kinder world for all genders free from the abusers as soon as possible. For that the scum needs to perish and go to dust. May it happen and may my wish come true" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். ஏவி ராஜுவின் இத்தகைய கருத்துக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinmayi condemned to avraju alleged on Tami actress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->