கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது - அரசு அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதம்.!!
chithambaram temple dikshitars argument to government officers
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது - அரசு அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதம்.!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நடராஜர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபடச் சென்றுள்ளார். இதைப்பார்த்த தீட்சிதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று கடந்த பதினேழாம் ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால், அனைத்து நாட்களிலும் பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பது இல்லை என்று ஒருபுறம் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதற்கிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து முன்னறிவிப்பின்றி வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது. நாளை காலை சிதம்பரம் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனை தலைதூக்கியுள்ளது.
English Summary
chithambaram temple dikshitars argument to government officers