தமிழக அரசுக்கு நெருக்கடி! ஸ்தம்பிக்க போகும் தமிழகம்! போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

வரும் மே மாதம்  3-ஆம் தேதிக்கு பிறகு, அல்லது அடுத்த 6 வாரங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தினர், நிரந்தரமாக ஓட்டுநர்களை பணிக்கு எடுக்கம்படி கோரிக்கை வைத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த மாத இறுதியில் கூடை விடுமுறை தொடங்க உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மே மாத தொடக்கம் அல்லது மே மாத இறுதியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், சுற்றுலா, சொந்த ஊருக்கு செல்பவர்கள் என பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CITU protest Announce TNGovt Bus April 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->