பள்ளியில் தொடரும் சாதி மோதல்! கழுவறையில் எழுதப்பட்ட வார்த்தை! இரு தரப்பு மாணவர்களிடையே கை கலப்பு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூட கழிப்பறை சுவற்றில் ஒரு சமுதாயம் மாணவர்கள் குறித்து அவதூறான வார்த்தைகளை மற்றொரு சமுதாய மாணவர்கள் எழுதியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக நேற்று காலையில் இருதரப்பு மாணவர்கள் இடையே வாய் தவறாக ஏற்பட்டு பிறகு மோதலாக வெடித்துள்ளது. இதில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்களின் மோதல் குறித்து அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  மாணவர்களை சமாதானம் படுத்தினார்கள். மோதல் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த 11 மாணவர்கள் மற்றும் ஒரு தரப்பை சேர்ந்த 11 மாணவர்கள் என்ன மொத்தம் 22 மாணவர்களை திருநெல்வேலியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

நீதிபதி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அரசுப் பள்ளியில் இரண்டு சமுதாய மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between students of two sides in government higher secondary school running in Tirunelveli district


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->