அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு... தூய்மைப் பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை! 2 பேர் பணியிட மாற்றம்.!
Cleanliness workers Refusal board govt bus 2 people transferred
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்க மறுத்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் கிராம பகுதிகளில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவ கல்லூரிக்கு நகர பேருந்துகளில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை எனவும், இயக்கப்படும் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முன் தூய்மை பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Cleanliness workers Refusal board govt bus 2 people transferred