கள்ளச்சாராயம் விவகாரம் - முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 58 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியும் மு. க ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். 

 

உடனே  காவல்துறையினர் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறிமுதல் செய்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இருப்பினும் அவர்கள் பதவி விலகு, பதவி விலகு, முதலமைச்சரே பதவி விலகு.. என்ற கன்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் அனுமதி மறுத்ததை மீறி, தமிழக அரசை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க.வினரை விரட்டி, விரட்டி காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm effugy fire in theni for kallasarayam issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->