#BREAKING: மீண்டும் தமிழக மீனவர்கள் கைது - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
CM MK Stalin letter to Central Minister for Tamil Fisherman arrest 11 july
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரியும், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மீனவர்களை தொடர்பாக தூதராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மொத்தம் 173 மீன்கொடி படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், வங்கக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்து உள்ளதையும் மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MK Stalin letter to Central Minister for Tamil Fisherman arrest 11 july