சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு ஊதியம் உயர்வு.! - Seithipunal
Seithipunal


சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பங்குபெறும் கிராமிய கலைஞர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி முதல்வரின் உத்தரவின் படி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இவர்களுக்கு தங்கும் இடம், உணவு, இரண்டு உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்." என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin order wages increased to rural artist in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->